ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனரை தூக்கிய போலீஸ்..
ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனரை அலேக்கா தூக்கிய போலீஸ்..
சற்று முன்…ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனரை சென்னை ஏர்போர்ட்டில் கால் வைத்ததும் அப்படியே அலேக்கா தூக்கிய போலீஸ்..ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் பண மோசடி விவகாரம், இப்போது கமலாலயத்தின் கதவுகளைத் தட்டியிருக்கிறது. முறைகேடு தொடர்பாக ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரும், தமிழ்நாடு பா.ஜ.க-வின் விளையாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்தவருமான ஹரீஷ் என்பவரைக் கைதுசெய்திருக்கிறது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ்.வழக்கமான நிதி நிறுவன மோசடி வழக்கில் அரங்கேறும் கைதைப்போல இதைக் கடந்துபோய்விட முடியாது. போலீஸ் திவீரமாகத் தேடியபோதே, பிரதமரை வரவேற்ற பா.ஜ.க குழுவில் இடம்பிடித்தவர்தான் இந்த ஹரீஷ்.புதுச்சேரி, மும்பை, டெல்லி என இடங்களை அடுத்தடுத்து மாற்றி, கைதிலிருந்து தொடர்ச்சியாகத் தப்பித்து வந்தவரை ஒருவழியாகச் சுற்றிவளைத்துவிட்டது போலீஸ். அவரின் கைது விவகாரம், பா.ஜ.க மாநில விளையாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி முதல் மாநிலத் தலைவர் அண்ணாமலை வரை விசாரணை வெளிச்சத்தைத் திருப்பியிருக்கிறது.தமிழ்நாடு பா.ஜ.க-வுக்குள் ஹரீஷின் கைது எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது… அண்ணாமலை, அமர் இருவருக்கும் இதனால் ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்ன..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…