ஹைகோர்ட்டில் அனல் பறந்த ஓபிஎஸ் வாதம்! நீதிமன்றம் தலையிட கூடாது எனில் நடத்துவது கட்சியா? கிளப்பா?
சென்னை: அதிமுக எனும் கட்சியின் உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது எனில் எடப்பாடி பழனிசாமி நடத்துவது கிளப் அல்லது சங்கமா? என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடைபெற்றது. அப்பொதுக்குழுவில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்; ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலில் நடைபெற்றது. பின்னர் ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு