ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ரூ.4.5 லட்சத்துக்கு "விற்கப்பட்டு" 38 வயது இளைஞரை திருமணம் செய்து கொண்டார்.
38 வயதான பூபால் சிங்கின் குடும்பத்தினர் சிறுமியை அவரது தந்தையிடமிருந்து ரூ .4.50 லட்சம் கொடுத்து “வாங்கியுள்ளனர்”. கடந்த மே மாதம் 21-ம் தேதி சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமியை நடுத்தர வயது நபருக்கு திருமணம் செய்வதற்காக ரூ.4.50 லட்சத்துக்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
38 வயதான பூபால் சிங்கின் குடும்பத்தினர் சிறுமியை அவரது தந்தையிடமிருந்து ரூ .4.50 லட்சம் கொடுத்து “வாங்கியுள்ளனர்”. கடந்த மே மாதம் 21-ம் தேதி சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் மாவட்டத்தின் மேனியா பகுதியில் நடந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் சிலர் சிறைவாசம் அனுபவித்த பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பம் கிராமத்தில் குடியேறியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தோல்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ்குமார் கூறுகையில், சிறுமியை விலைக்கு வாங்கி நடுத்தர வயது நபருக்கு திருமணம் செய்து வைத்ததாக செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
துணை போலீஸ் சூப்பிரண்டு (மேனியா) தீபக் கண்டேல்வால் தலைமையிலான குழு சிறுமி மீட்கப்பட்ட ஒரு வீட்டில் சோதனை நடத்தியது. அவள் கைகளிலும் கணுக்காலிலும் மருதாணி வரைந்திருந்தாள்.
சிறுமியின் தந்தைக்கு ரூ .4.50 லட்சம் செலுத்திய பின்னர் சிறுமியை “வாங்கியதாக” சிங்கின் குடும்ப உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டதாக கண்டேல்வால் கூறினார்.
இந்த செயலில் யார், எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.