ராகுலுக்கும் பிரதமருக்கும் என்ன தான் பிரச்சனை? நடந்தது இதுதாங்க! புட்டு புட்டு வைத்த முகுல் வாஸ்னிக்
ராகுலுக்கும் பிரதமருக்கும் என்ன தான் பிரச்சனை? நடந்தது இதுதாங்க! புட்டு புட்டு வைத்த முகுல் வாஸ்னிக்
சென்னை: ராகுல்காந்திக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே என்னதான் பிரச்சனை என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் சென்னையில் புட்டு புட்டு வைத்துள்ளார்.
ராகுல் என்ன பேசினார், எப்போது பேசினார், எப்போது வழக்கு போடப்பட்டது என்பது பற்றியெல்லாம் தேதி வாரியாக குறிப்பிட்டுள்ளார்.
அதானியின் முறைகேடு அதானியின் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உரையாற்றி 9 நாட்கள் ஆன நிலையில், அவர் மீதான அவதூறு வழக்கு உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதானியின் முறைகேடு
குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேச்சும், மக்களவையில் ராகுல் காந்தி பேசிய பேச்சும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
வரலாற்றிலேயே முதல்முறையாக
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி நடந்து கொண்டிருக்கும் நிலையில், வரலாற்றிலேயே முதல்முறையாக ஆளும் கட்சியான பா.ஜ.க. நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளது. இது அதானியை காப்பாற்ற நடக்கும் திசைதிருப்பு முயற்சியாகும். ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகள் கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை கோரியதை ஆளும் பாஜக
வாய்ப்பு மறுப்பு
ராகுல் காந்தியை பாஜக அமைச்சர்கள் தாக்கிப் பேசினர். தமக்குப் பேச வாய்ப்பு தருமாறு, 2 முறை எழுத்துப்பூர்வமாகவும் ஒருமுறை நேரிலும் சந்தித்து சபாநாயகரைக் கேட்டுக் கொண்டும் ராகுல் காந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதிலிருந்து அதானியுடனான தமது உறவை வெளிப்படுத்த பிரதமர் மோடி விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
பயந்துவிடப்போவதில்லை
ராகுல் காந்தியோ காங்கிரஸோ இதைப் பார்த்துப் பயந்துவிடப்போவதில்லை. இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது மக்களை நேரில் சந்தித்தோம். அப்போது விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமூக சமத்துவம் மற்றும் அரசு அமைப்புகள் கைப்பற்றப்பட்டது போன்ற அவர்களது கருத்துகளை அறிந்தோம். மக்கள் பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்புவோம். எங்கள் செய்தியை தொடர்ந்து மக்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்வோம். கிரிமினல் அவதூறு வழக்கில் அதிகபட்ச 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பது இதுவரை கேள்விப்படாதது. ஒருபுறம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருக்கும் நிலையில் இதுபோன்ற வழக்கைக் கேள்விப்படவில்லை.
அவதூறு வழக்கு நடந்த காலம் :
2019 ஏப்ரல் 13- கர்நாடக மாநிலம் கோலாரில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். 2019 ஏப்ரல் 16- குஜராத் மாநிலம் சூரத் கீழமை நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ புர்னிஷ் மோடி புகார் தாக்கல் செய்தார். 2022 மார்ச் 7- தான் கொடுத்த புகாருக்கே குஜராத் உயர்நீதிமன்றத்தில் புகார்தாரர் புர்னிஷ் மோடி தடையாணை பெற்றார். 2023 பிப்.7- மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான உறவு குறித்து கேள்வி எழுப்பினார். 2023 பிப்.16- குஜராத்தில் தான் பெற்ற தடையாணையை புகார்தாரர் புர்னிஷ் மோடி திரும்பப் பெற்றார். 2023 பிப்.27- கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மீண்டும் தொடக்கம். 2023 மார்ச் 23- ராகுல் காந்தியை தண்டித்த நீதிமன்றம், அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.2023 மார்ச் 24- தீர்ப்பு வெளியான 24 மணி நேரத்துக்குள் மக்களவை செயலாளர் ராகுல் காந்தியின் எம்பி பதவியைத் தகுதி நீக்கம் செய்தார்.