மிட்நைட்டில் அலறிய “சென்னை ஐஐடி”.. ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு.. கிச்சனுக்கு போய் தூக்கில் தொங்கிய மாணவர்

மிட்நைட்டில் அலறிய "சென்னை ஐஐடி".. ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு.. கிச்சனுக்கு போய் தூக்கில் தொங்கிய மாணவர்

சென்னை: சென்னை ஐஐடியில் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் சச்சின்குமார் ஜெயின் என்பவர் வீட்டிலுள்ள கிச்சனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


ஆயிரக்கணக்கான மாணவர்கள் வருடந்தோறும் படித்து வெளியேறி வருகிறார்கள்.. சென்னை, மும்பை, கான்பூர், லக்னோ உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிளை பரப்பி செயல்பட்டு வருகிறது ஐஐடி


ஐஐடி அலறல்

அதேசமயம், சாதி, மத ரீதியான ஒடுக்குமுறைகள் ஐஐடி வளாகங்களில் நடப்பதாக, அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன.. காரணம், முறையாக இங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால் இங்கு உயர்சாதியினர் ஆதிக்கம் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மற்றொருபுறம், ஐஐடி வளாகங்களில் மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்களும், மர்ம மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன.. கடந்த 15 நாட்களுக்கு முன்புகூட ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.. சென்னை ஐஐடியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீவன் சன்னி என்ற மாணவர் 2ம் ஆண்டு முதுநிலை ஆராய்ச்சி படிப்பு படித்து வந்துள்ளார்.


மன அழுத்தம்

அவர் சென்னை ஐஐடி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்… இவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாததால் மன அழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீவன் சன்னி, தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்டது.. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோட்டூரபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும்நிலையில், அதற்குள்ளாகவே இன்னொரு மாணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்தான்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *