பிரபல தமிழ் படங்களின் படப்பிடிப்பில் இருந்து பாதியில் விலகிய முன்னணி நட்சத்திரங்கள்
பிரபல தமிழ் படங்களின் படப்பிடிப்பில் இருந்து பாதியில் விலகிய முன்னணி நட்சத்திரங்கள்
திரைத்துறையில் பிரபலமாகி ஒரு முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து புகழ் பெற்றுள்ள தமிழ் திரைப்பட நடிகர் நடிகைகள் இழந்துள்ள சில ப்ளாக்பஸ்டர் படங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது
திரைப்பட இயக்குனர்களின் திரைக்கதையினை கேட்டறிந்து தயாரிப்பாளரின் ஒப்பந்தத்தில் படத்தின் படப்பிடிப்பினை தொடங்கி நடித்து வந்துள்ள நட்சத்திரங்கள் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விழகியுள்ளனர். இதற்கான காரணங்களும் அதிகாரப்பூர்வமாக சில தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டாலும் இன்னும் இதே போல் நடந்துள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் பணிகளுக்கான காரணங்களால் தெரியவில்லை.
1. உன்னை நினைத்து
உன்னை நினைத்து – இப்படத்தில் நாயகனாக முதலில் விஜய் நடித்து வந்துள்ளார். பின்னர் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விஜய் விலக சூர்யா நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது.
2. ஆடுகளம்
ஆடுகளம் – வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம், இப்படம் பெரிய அளவில் புகழ் பெற்று தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு மாபெரும் புகழ் மற்றும் விருதுகளை அள்ளித்தந்துள்ள திரைப்படம். இப்படத்தில் நாயகியாக திரிஷா பாதி காட்சிகளில் நடித்துவந்துள்ளார், பின்னர் திரிஷா இப்படப்பிடிப்பில் இருந்து விலக டாப்சீ நாயகியாக நடித்துள்ளார்.
3. நேருக்கு நேர்
நேருக்கு நேர் – விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் துணை நடிகராக முதலில் அஜித் நடித்து வந்துள்ளார், பின்னர் அஜித் இப்படத்தில் இருந்து விலக சூர்யா இப்படத்தில் இணைந்து இரண்டாம் கட்ட நாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமே நடிகர் சூர்யா நடிகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமான முதல் படமாகும்.
4. பிரெண்ட்ஸ்
ஃபிரண்ட்ஸ் – விஜய், சூர்யா, ரமேஷ் கன்னா நடிப்பில் உருவாகியுள்ள குடும்பத்திரைப்படம். இப்படம் பெரிய அளவில் வசூல் மற்றும் சாதனைகள் படைத்தது தமிழ் திரைத்துறையில் புகழ் பெற்றுள்ள படமாகும். இப்படத்தில் நாயகியாக நடிக்க முதலில் ஜோதிகா மாற்றம் சுவுலக்ஷ்மி நடித்துள்ளனர், பின்னர் இவர்கள் இருவரும் இப்படத்திலிருந்து விலக நாயகியாக தேவயானி, விஜயலக்ஷ்மி இப்படத்தில் நடித்துள்ளனர்.