விளை நிலத்தில் நிலக்கரி சுரங்கம்..எங்கள் தலையில் விழுந்த இடி..மத்திய அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு

விளை நிலத்தில் நிலக்கரி சுரங்கம்..எங்கள் தலையில் விழுந்த இடி..மத்திய அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் மத்திய அரசைக் கண்டித்து கடுமையான போராட்டம் நடத்துவோம் என விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக சுரங்கம் 1, சுரங்கம் 1ஏ, சுரங்கம் 2 ஆகிய 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அடுத்து நெய்வேலிக்கு அருகே ஆண்டுக்கு 1.15 கோடி டன் நிலக்கரி எடுக்கும் 3ஆவது மிகப்பெரிய சுரங்கத்தை ரூ. 3556 கோடி செலவில் அமைக்க என்.எல்.சி இந்தியா நிர்வாகக் குழுவில் 21.07.2022 அன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதற்காக 12,125 ஏக்கர் உட்பட மொத்தம் 25,000 ஏக்கர் நிலங்களை என்.எல்.சி கையகப்படுத்தவுள்ளது.

காவிரி படுகையில் சுரங்கம்

என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரி படுகையை ஒட்டியே அமையவுள்ளது. ஐந்தாவதாக வீராணம் நிலக்கரித் திட்டம், ஆறாவதாக பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம், ஏழாவதாக சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், எட்டாவதாக தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி நிலக்கரித் திட்டம், ஒன்பதாவதாக அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளன.


வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம்

இவற்றில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 3 நிலக்கரி திட்டங்கள் தவிர, மீதமுள்ள 6 திட்டங்களுக்காக மட்டும் குறைந்தது 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப் படக் கூடும். இவற்றில் வீராணம், பாளையம்கோட்டை, சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே, வடசேரி ஆகிய 4 திட்டங்கள் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன.


விவசாயிகள் கடும் எதிர்ப்பு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *