தோனியின் படை.. 7 பேட்ஸ்மேன்கள், 9 ஆல் ரவுண்டர்கள், 10 பந்துவீச்சாளர்கள்.. சென்னை அணி முழு விவரம் இதோ
அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணிக்கு எதிராக சென்னை அணி களமிறங்க உள்ளது. இந்த நிலையில் சென்னை அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள், ஆல் ரவுண்டர்கள் மற்றும் பவுலர்கள் பற்றி பார்க்கலாம். இம்பேக் பிளேயர் விதி இருப்பதால், யாரை வேண்டுமானாலும் தோனி களமிறக்க வாய்ப்புகள் உள்ளது.
அரசன் வருகைக்கு முன் பாடப்படும் துதிப்பாடல் போல் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் சாதனைகளை சொல்லி அறிமுகம் செய்யும் அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாபெரும் சம்பவத்தை நிகழ்த்தி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
4 முறை சாம்பியன், 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி, சாம்பியன்ஸ் லீக் கோப்பை என்று டி20 ஐபிஎல் தொடர் தொடர்பான அனைத்து சாதனைகளிலும் தனது பெயரை உச்சத்திலேயே வைத்துள்ளது சென்னை அணி.
தற்போது தோனியின் கடைசி ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று கனவுடன் களமிறங்குகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டில் ஏற்பட்ட சரிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை அணியின் கம்பேக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப சென்னை அணியின் வீரர்கள் அனைவரும் கோப்பையை வெல்வதற்கு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.