தமிழ்நாட்டின் பிரச்சனை என்னவென்றே தெரியவில்லை – தெலுங்கானா ஆளுநர் மீது பூவுலகின் சுந்தர்ராஜன் கடும் தாக்கு
“தமிழ்நாடு பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண்” என்று விரைவில் தெரியவரும் என்றுள்ளார் தமிழிசை. அதாவது தமிழ்நாடு கடவுள் நம்பிக்கை கொண்ட மண், கடவுள் மறுப்பு மண் அல்ல என்று சொல்லவருகிறார்.
இங்குள்ள பிரச்சனை என்னவென்றே உங்களுக்கு தெரியவில்லையே தமிழிசை, இங்குள்ள பிரச்சனை
ஆழ்வார்கள்/நாயன்மார்கள் Vs பெரியார் அல்ல,
ஆழ்வார்கள்/நாயன்மார்கள் Vs ஸ்மார்த்தர்கள்/தீட்சிதர்கள்தான்.
தில்லையில் நந்தனாரை கொளுத்தியது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களா? இத்தனைஆயிரம் ஆண்டுகள் அந்த கோவிலில் அழிச்சாட்டியம் செய்யும் கடவுள் நம்பிக்கை கொண்ட தீட்சிதர்கள் தானே.
பெண்கள் தோள்சீலை அணியக்கக்கூடாது என்று சொன்னது கடவுள் நம்பிக்கை கொண்ட நம்பூதிரிகளா அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களா?
தமிழ்நாட்டில் எது பிரச்சனை என்றே உங்களுக்கு தெரியவில்லை எனில் எங்களுக்கு மகிழ்ச்சியே,