தமிழகத்தில் 2 நாட்களில் 2,000 வழக்குகள் பதிவு: 1,558 பேர் கைது: டி.ஜி.பி.
கள்ளச்சந்தையில் பதுக்கி வைத்திருந்த 19,028 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 16,493 ஐ.எம்.எப்.எல் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கள்ளச் சாராயம் குடித்து 17-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இரு சம்பவங்கள் தொடா்பாக 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 2 நாள்களில் 1,558 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தமூர் ஆகிய கிராமங்களில் கடந்த வார இறுதியில் கள்ளச்சாராயம் குடித்து 17-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கடந்த 2 நாட்களில் கள்ளச்சந்தையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19,028 லிட்டர் கள்ளச் சாராயம் மற்றும் 16,493 இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களை திங்கள்கிழமை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி என்.ஸ்ரீநாதா மற்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு டி.எஸ்.பி.க்கள் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு எஸ்.பி., பிரதீப் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது.
மது அருந்த அரசு மக்களை ஊக்குவிப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்களும், நடிகர்களும் வாய்திறக்கவில்லை என்றும் முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.