செல்பி எடுக்கவந்தது குத்தமா… ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு முறைத்த ஷாருக்கான் – வைரலாகும் வீடியோ
செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டதோடு, அவரை நடிகர் ஷாருக்கான் முறைத்தபடி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடித்த ஜீரோ திரைப்படம் படுதோல்வி அடைந்ததால் 4 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஷாருக்கான். அதன்பின் பதான் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
பதான் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஷாருக்கான் நடிப்பில் தற்போது ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார்கள். ஜவான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.இதுதவிர டுங்கி என்கிற படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார் ஷாருக். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ஷாருக் கான், தன்னைக் காண தனது வீட்டின் முன் ரசிகர்கள் குவிந்தால் அவர்களைப் உடனடியாக வந்து பார்க்கும் குணம் கொண்டவர். அப்படி இருக்கும் ஷாருக்கான், சமீபத்தில் ஏர்போர்ட்டில் செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் காண்போரை அதிர்ச்சியடைய செய்தது.நடிகர் ஷாருக்கான் மும்பை ஏர்போர்டிற்கு வந்தபோது அவருடைய ரசிகர் ஒருவர் செல்போனை செல்பி எடுப்பதற்காக நீட்டினார். உடனே அந்த ரசிகரின் செல்போனை ஷாருக்கான் தட்டிவிட்டதோடு அவரைப் பார்த்து முறைத்தபடி சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.