சிக்குகிறது “கருப்பு ஆடு”..இது எப்படி அங்கே போகுது.. உளவுத்துறைக்கு பறந்த மேலிட ஆர்டர்.. “அசராத மலை”

சிக்குகிறது "கருப்பு ஆடு"..இது எப்படி அங்கே போகுது.. உளவுத்துறைக்கு பறந்த மேலிட ஆர்டர்.. "அசராத மலை"

சென்னை: அதிமுக – பாஜக இடையே சமீபகாலமாக சூழல் சரியில்லாத நிலையில், பலவித மாற்றங்கள் நிகழ துவங்கி உள்ளன.. குறிப்பாக, மாநில தலைவர் அண்ணாமலையின் அதிரடிகள் ஆரம்பமாகி உள்ளது.. இது பலருக்கு கலக்கத்தை தந்துள்ளதாகவே தெரிகிறது. பாஜக- அதிமுக இடையே என்னதான் பிரச்சனை என்பது வெளிப்படையாக தெரியவில்லை.. கூட்டணி தொடரும் என்று ஒருசாராரும், அண்ணாமலை பேசியது சரிதான் என்று மற்றொரு சாராரும் பாஜகவுக்குள்ளேயே உள்ளதால், விவகாரம் முற்றுப்பெறவில்லை.

“எடப்பாடி பழனிசாமி – அண்ணாமலை 2 பேரும் சேர்ந்து நாடகம் நடத்தி கொண்டிருக்கிறார்கள், தங்களை நடுநிலைவாதிகள் போல காட்டிக் கொள்ள முயல்கிறார்கள்” என்று மூத்த தலைவர் கேசி பழனிசாமி சொல்லி வந்தாலும், இதுகுறித்து உண்மைக்காரணம் தெரியவில்லை. வார்த்தை போர்களும் வலுவாகி கொண்டிருக்கின்றன..

கொந்தளிப்பு இதனால், 2024-ல் நடைபெற உள்ள எம்பி தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.. “பாஜக இல்லாமல் அதிமுகவால் தனித்து செயல்பட முடியாது, பாஜக தயவு அதிமுகவுக்கு தேவையாக இருக்கிறது” என்று தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி சொல்லியிருந்தது, அதிமுகவினரிடையே மறுபடியும் கொந்தளிப்பை கிளப்பிவிட்டுள்ளது.. அதிமுக அல்லாத கூட்டணிக்கு அண்ணாமலை தயாராகிவருவதாக தெரிகிறது.. அதற்காகவே, கட்சியை பலப்படுத்தும் நோக்கில், சில களையெடுப்புகளிலும் இறங்கி உள்ளாராம்.. மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவரும் நிலையில், இதன்குறி ராமநாதபுரம் மாவட்டத்தில் விழுந்துள்ளது..


போஸ்டர்

போஸ்டர் கட்சி நிர்வாக பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக அண்ணாமலை அதிரடியாக அறிவித்திருந்தார்.. அண்ணாமலையின் இந்த அதிரடி அறிவிப்பு பாஜகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு எதிராக முக்கிய தலைகள் சிலர் அணி திரட்டி வரும் நிலையில், அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற செய்தியும் கசிந்து கொண்டிருக்கிறது.. ஒருபடிமேலே போய், அண்ணாமலைக்குப் பதிலாக மறுபடியும் பொன்.ராதாகிருஷ்ணன் மாநில தலைவராக்கப்படலாம் என்ற பேச்சும் கிளம்பியது.. ஆனால், விஷயம் என்னவென்றால், பொன்னாரின் அதே குமரி மாவட்டத்தில், அண்ணாமலைக்கு ஆதரவுகள் போஸ்டர்கள் மூலம் வெளிப்பட துவங்கி உள்ளது..

கறுப்பு ஆடுகள்

எதை பற்றியும் கவலைப்படாமல், யாரை பற்றியும் கவலைப்படாமல், தன் மீதான அசாத்திய நம்பிக்கையில், அண்ணாமலை களவாட துவங்கி உள்ளதை மேலிடமும் கவனிக்காமல் இல்லை.. “தனித்து போட்டி” என்று அண்ணாமலை சொல்லும் வியூகத்தையும் மேலிடம் கவனத்தில் கொண்டுள்ளதாகவே தெரிகிறது.. எனினும், உட்கட்சி பூசல் முடிவுக்கு வராததும் சிக்கலை அதிகப்படுத்தி வருவதாக தெரிகிறது.. இதற்கு நடுவில், பாஜகவுக்குள் சில “கருப்பு ஆடுகள்” இருப்பதாக புது தகவல் ஒன்று கசிந்து கொண்டிருக்கிறது. சில பாஜக நிர்வாகிகள், அதிமுக மாஜி அமைச்சர்களுடன் ரகசிய தொடர்பில் இருக்கிறார்களாம். அதாவது பாஜகவில் சீட் வாங்க, அதிமுக ஆதரவுடன் வெற்றி பெற திட்டமிட்டு வருகிறார்களாம்..


லீக் மெசேஜ்

ஒருவேளை, சம்பந்தப்பட்ட புகார்கள் உண்மை என்றால், அந்த கருப்பு ஆடுகள் விரைவில் சிக்குவார்கள் என்கிறார்கள்.. கடந்த வருடம், அதாவது திமுக அரசு பொறுப்பேற்றபோது, இதுபோலவே “கருப்பு ஆடுகள்” பிரச்சனை கிளம்பியது.. அரசு முன்னெடுக்கும் திட்டங்கள், பணிகள் குறித்து பாஜகவுக்கு மெசெஜ் பாஸ் செய்வது யார்? அரசு சார்ந்த விஷயங்கள் வெளியே லீக் செய்வது யார்? அதுவும், தவறான புள்ளிவிவரங்கள், தகவல்களை தந்து, அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் அதிகாரிகள் யார்? என்பதை கண்டறியும்படியும், உளவுத்துறைக்கு உத்தரவு ஒன்றை திமுக மேலிடம் பிறப்பித்ததாக சொல்லப்பட்டது. அதில் யார் சிக்கினார்கள் என்று தெரியவில்லை.. ஆனால், அதுபோன்ற புகார் இப்போது, பாஜகவுக்குள்ளேயே கிளம்பி உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது..!!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *