சரியா போச்சு.. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும்.. உலக வங்கி எச்சரிக்கை ரிப்போர்ட்

சரியா போச்சு.. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும்.. உலக வங்கி எச்சரிக்கை ரிப்போர்ட்

டெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக குறையும் என்றும் உலக வங்கி கணித்து இருக்கிறது. இந்திய வங்கிகள் நல்ல மூலதனத்துடன் இயங்கி வருவதாகவும் உலக வங்கி கூறியுள்ளது.


உலகின் பல்வேறு நாடுகளுக்கு நிதி, கடன் உள்ளிட்டவற்றை வழங்கி வரும் உலக வங்கி அனைத்து நாடுகளின் பொருளாதார நிலை, வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கைகளை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கை ஒன்று உலக வங்கியால் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.


இந்திய பொருளாதார வளர்ச்சி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான முன் அறிவிப்பை உலக வங்கி வெளியிட்டு உள்ளது. அதன்படி இன்று உலக வங்கி வெளியிட்டு உள்ள ஆய்வு அறிக்கையின்படி, நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது 6.3 சதவீதம் முதல் 6.6 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


பணவீக்கம்

அத்துடன் அதிகளவில் வாங்கப்பட்ட கடனுக்கான செலவுகளால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உலக வங்கி கூறி இருக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 250 அடிப்படை புள்ளிகளை உயர்த்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


கடன் செலவு

கடன் செலவுகள் அதிகரிப்பதாலும், மெல்லிய பொருளாதார வளர்ச்சியின் காரணமாகவும் தனியார் நுகர்வில் பாதிப்பு உண்டாகும் என உலக வங்கி தெரிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காலக்கட்டத்தில் அதற்கென செலவழிக்கப்படும் நிதி தற்போது திரும்பப்பெறப்பட்டு வருவதால் அரசாங்கத்தின் நுகர்வு மீண்டும் மெல்ல உயரத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


குறைந்த வளர்ச்சி விகிதம்

இந்த நிதியாண்டில் 6.3 சதவீதம் முதல் 6.6 சதவீதம் வரை நாட்டின் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிட்டு இருக்கும் உலக வங்கி, கடந்த நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என்று கணித்து இருந்தது. அதேபோல் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியின் நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது 2.1 சதவீதமாக குறையும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இது 3 சதவீத என கணிக்கப்பட்டு இருந்தது.


இந்திய வங்கிகள்

சேவைகள் ஏற்றுமதி உயர்வு மற்றும் வணிக பற்றாக்குறை குறைந்ததால் ஜிடிபி பற்றாக்குறை குறைந்துள்ளது. இதுகுறித்து உலக வங்கியின் பொருளாதார நிபுணர் துருவ் ஷர்மா தெரிவிக்கையில், “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஏற்பட்டு இருக்கும் குழப்பமான சூழலால், இந்தியா போன்று வளரும் சந்தைகள் பாதிக்கப்படும். அதே நேரம் நல்ல மூலதனத்தில் இந்திய வங்கிகள் உள்ளன.” என்றார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *