ஒன்று போல பேசிய எடப்பாடி - அமித் ஷா.. மாறிய காட்சிகள்.. நிர்கதியாக்கப்படும் ஓபிஎஸ்? என்ன நடக்குது?
சென்னை: தொடக்கத்தில் இருந்தே பாஜகவை ஆதரித்த ஓபிஎஸ் நிலை என்ன ஆகும்? அவர்களை நம்பி இருந்த ஓபிஎஸ் என்ன செய்வார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமித் ஷா வந்திருந்தார். இந்த நிலையில் அவரை தனியாக சந்திக்க ஓ பன்னீர்செல்வம் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் இதற்கு அனுமதி தரப்படவில்லை.
மாறாக அந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க மட்டும் ஓ பன்னீர்செல்வத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இதில் அமித் ஷாவை சாதித்த ஓ பன்னீர்செல்வம் அவருக்கு கை கொடுத்தார். முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.
எடப்பாடி பதில்
பாஜக என்பது தேசிய கட்சி. அதிமுக என்பது பிரதான மாநில கட்சி. அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷா வரும்போதெல்லாம் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியது தமிழக பாஜகவை மட்டுமல்ல ; பாஜகவின் தேசியத் தலைவர்களைக்கூட கோபப்பட வைத்திருக்கிறதாம்.