ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய வடிவேலு – புகைப்படங்கள் வைரல்
ரி செல்வராஜின் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளார்.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் நடிக்கின்றனர். வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பரவலாக கவனம் பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தில் வடிவேலு பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதனை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வைகைப் புயல் வடிவேலுவுடன் ஒரு பாடலை பதிவு செய்தோம். பாடல் பதிவின் போது எங்கள் அனைவரையும் சிரிக்க வைத்து, மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுத்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் “மாமன்னன்” திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.