ஆங்கிலத்தில் பேசிய விவசாயி.. டென்சனான முதல்வர் நிதீஷ் குமார்.. கைதட்டி ஆரவாரம் செய்த மக்கள்

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் விவசாயி ஒருவர், ஆங்கிலத்தில் பேசியதால் ஆத்திரம் அடைந்த முதல்வர் நிதீஷ் குமார் இடையிலேயே நிறுத்தி, இதென்ன இங்கிலாந்து நாடா? பீகாரில் இருக்கிறீர்கள், இந்தியில் பேசுங்கள் என்று கூறினார்.

பீகாரின் பாட்னா நகரில் 4-வது வேளாண் திட்ட நிகழ்ச்சி முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடந்தது. இதில், லக்கிசராய்யைச் சேர்ந்த அமித் குமார் என்ற விவசாயி ஒருவர் பங்கேற்று பேசினார். அவர் பேச தொடங்கியதும் ஆங்கிலத்தில் முதல்வர் நிதிஷ் குமாரை புகழ்ந்து தள்ளினார்.

மேனேஜ்மெண்ட் பட்டப்படிப்பு படித்தவரான அவர், புனேவில் நல்ல வேலையை விட்டு விட்டு சொந்த மாவட்டத்தில் காளாண் வளர்ப்பில் ஈடுபட்டு உள்ளார். இந்த தைரியம் வருவதற்கு நிதீஷ் குமார் அரசு கொண்டு வந்த திட்டம் தான் காரணம் என்றும், அரசு அதற்கான சூழ்நிலையை உருவாக்கியதாகவும் கூறினார்.

அவர் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நல்ல சம்பளத்துடனான வேலையில் இருந்தது, விவசாய பணியில் ஈடுபட்டது பற்றியும் தனது வாழ்க்கை பயணம் பற்றியும் கூட்டத்தில் ஆங்கிலத்தை பயன்படுத்தி பேசி உள்ளார். அவரது பேச்சில் ஈர்க்கப்படாத நிதிஷ் குமார், அவரை இடையிலேயே நிறுத்தி, இதென்ன இங்கிலாந்து நாடா? நீங்கள் பீகாரில் இருக்கிறீர்கள். ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தி பேசி கொண்டு இருக்கிறீர்கள். விவசாய வேலையில் ஈடுபடுகிறார்கள். விவசாய பணிகளை சாமானிய மக்கள் பார்க்கிறார்கள். அவர்களுக்கு புரிய வேண்டும். இந்த நிகழ்ச்சியில் ஆலோசனை கூற அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். ஆனால், ஆங்கிலத்தில் பேசி கொண்டு இருக்கிறீர்கள். இந்தியில் பேசுங்கள் என முதல்வர் நிதீஷ்குமார் டென்சன் ஆகி இருக்கிறார். இதை கேட்டு உற்சாகமான பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்ததுடன், அவரை இந்தியில் பேச சொன்னார்கள்.

மேலும் நிதீஷ்குமார் அவரிடம் உள்ளால் சர்காரி யோஜனா என்று அரசு திட்டம் பற்றி இந்தியில் உங்களால் கூற முடியாதா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் ? நான் ஒரு பொறியாளர், நான் படித்தது ஆங்கிலவழி கல்வியில். கல்வித் தேவைகளுக்கு ஆங்கில மொழியைப் பயன்படுத்துவது வேறு விஷயம். நீங்கள் ஏன் அதை அன்றாடம் செய்ய வேண்டுமா என்ன? இது வாழ்க்கை? இங்கு ஆங்கிலம் வேண்டுமா.. நம் மொழியிலேயே பேசுங்கள் ” இவ்வாறு நிதீஷ்குமார் கூறினார். இதனிடையே பொதுக் கூட்டத்தில் இதுபோன்று நிதீஷ் குமார் நடந்து கொண்டது முற்றிலும் கேலிக்குரியது என பா.ஜ.க. மூத்த தலைவரான நிகில் ஆனந்த் கூறியுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/patna/is-this-england-nitish-kumar-after-an-upwardly-mobile-farmer-speaks-in-english-499949.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *