அமைச்சராக பதவியேற்ற டிஆர்பி ராஜா..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் ரவி
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தின் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமானணம் செய்து வைத்தார்.
தமிழக அமைச்சரவை மாற்றம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்து 2 வருடங்கள் முடிவடைந்து 3 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தநிலையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. அதன் படி பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் மாற்றப்பட்டு புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா அறிவிக்கப்பட்டார். 3 முறை மன்னார்குடி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிஆர்பி ராஜா, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக தலைவருமான டிஆர் பாலுவின் மகனாவார். டிஆர்பி ராஜா திமுக ஐடி பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார்.

புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா
இந்தநிலையில் இன்று காலை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். டிஆர்பி ராஜாவின் தந்தை டிஆர் பாலு மற்றும் அவரது குடும்பத்தினரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்கள். இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி, டிஆர்பி ராஜாவிற்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார் . தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவியோடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம்.?
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டிஆர்பி ராஜா முதலமைச்சரின் சிந்தனைக்கு ஏற்ப தனது செயல்பாடுகள் இருக்கும் என தெரிவித்தார். டிஆர்பி ராஜா அமைச்சராக பதவியேற்றதையடுத்து அவருக்கு ஒதுக்கப்பட்ட துறை தொடர்பான அறிவிப்பு இன்ன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல தமிழக அமைச்சர்களின் துறைகளும் மாற்றி அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.