அச்சச்சோ.. ஆப்பிள் நிறுவனத்திலும் பணி நீக்கமா.. எங்கு யாரெல்லாம்.. எத்தனை பேர்?
அச்சச்சோ.. ஆப்பிள் நிறுவனத்திலும் பணி நீக்கமா.. எங்கு யாரெல்லாம்.. எத்தனை பேர்?
Apple: ஐபோன் உற்பத்தியளாரான ஆப்பிள் நிறுவனம் சிறிய அளவிலான பணி நீக்க நடவடிக்கையினை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் வேலைக்கு விண்ணப்பியுங்கள்
மற்றொரு அறிக்கையில் ஆப்பிள் ஊழியர்கள் மீண்டும் தங்களது வேலைகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அப்படி விண்ணப்பிக்காவிடில் அவர்கள் வேலையை விட்டு நீக்கப்படலாம் என கூறப்படுவதாகவும் தெரிகின்றது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
ஏன் பணி நீக்கம்
உலகெங்கிலும் உள்ள ஆப்பிள் சில்லறை விற்பனைக் கடைகளில் செய்யப்பட்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், வேலையிழப்பு என்பது அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது, சர்வதேச அளவிலான பொருளாதாரம் மீண்டும் சரிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறும் நிலையில் வந்துள்ளது.
மோசமான பொருளாதார சூழல்
ஏற்கனவே வட்டி விகிதம் அதிகரித்து வரும் சூழலில் பொருளாதார வளர்ச்சியானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகப்பெரிய அளவிலான பணி நீக்கத்திற்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. ஏற்கனவே மிகப்பெரிய டெக் நிறுவனங்கள் பலவும் மிக பெரியளவிலான பணி நீக்கத்தினை செய்துள்ளன. குறிப்பாக பேஸ்புக், கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் என பலவும் இதில் அடங்கும்.
ஊழியர்கள் கவலை
இந்த காலகட்டத்தில் அமேசான் நிறுவனம் 27,000 பேரையும், முதல் கட்டமாக 18,000 பேரையும், இரண்டாம் கட்டமாக 9000 பேரையும் பணி நீக்கம் செய்துள்ளது. இப்படி பல்வேறு நிறுவனங்களின் பணி நீக்க நடவடிக்கைக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனத்திலும் பணி நீக்கம் என்பது இன்னும் என்னவாகுமோ என்ற பதற்றம் ஊழியர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.